வங்கதேசத்தை அலறவிட்ட தோனி, ராகுல்! இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா

4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கே.எல்.ராகுல், தோனி சரிவிலிருந்து மீட்டனர்.

வங்கதேசத்தை அலறவிட்ட தோனி, ராகுல்! இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா
IndvsBan
  • News18
  • Last Updated: May 28, 2019, 7:57 PM IST
  • Share this:
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோனி, ராகுலின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 359 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சர்மா - தவான் களமிறங்கினார்கள். தவான் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.


அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 47 ரன்னிலும், ரோஹித் சர்மா 19 ரன்னிலும் அவுட்டாகினர். காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடமால் இருந்த விஜய் சங்கர் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் 2 ரன்னில் வெளியேறினார்.

4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கே.எல்.ராகுல், தோனி சரிவிலிருந்து மீட்டனர். ராகுல் 108 ரன்களில் அவுட்டாக மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 360 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கவுள்ளது.
First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading