Home /News /sports /

டி20 போல் முடிந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்!

டி20 போல் முடிந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்!

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

  • News18
  • Last Updated :
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் அனைத்து அணிகளும் விளையாடி வருகிறது.

இன்றைய பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷஷாய், நூர் அலி களமிறங்கினார்.



இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் நபி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்சர் மற்றும் ரூட் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. தொடக்க வீரர் ஜாசன் ராய் 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.

Also Read:  Fact Check: கனடா சென்ற ஜெயசூர்யா மரணமடைந்தாரா?

Also Read: இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!

Also Read:இந்தியாவிற்கு எதிரான வரலாற்றை மாற்றிக் காட்டுவோம்! இன்சமாம்-உல்-ஹக் உறுதி

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி