உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுப்பட்டது.

Vijay R | news18
Updated: May 24, 2019, 10:36 PM IST
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!
PAKvAFG
Vijay R | news18
Updated: May 24, 2019, 10:36 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அதிரடியாக ஆடிய ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன் அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இன்று முதல் ஆரம்பிக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக், ஜமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இமாம் 32 ரன்னிலும், ஜமான் 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.பாகிஸ்தான் அணியில் பாபர் அஷாம் மட்டும் நிலைத்து நின்று ஆடி 112 ரன்கள் குவித்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை ஆப்கன் வீரர்கள் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடி ஷாகிடி அரைசதம் கடந்தார்.  பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் 263 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாகிடி 74 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ரியாஸ் 3 விக்கெட்களும், இமாத் வாசிம் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Also Read : 500 ரன்களை அடிக்கப்போகும் முதல் அணி எது தெரியுமா? – விராட் கோலி பதில்

Also Read : தோனியைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை – ரவி சாஸ்திரி

Also Read : பெண் பயணிகளுடன் வாக்குவாதம்! விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய வீரர்

Also Read : உலகக்கோப்பை தொடர் சவாலாக இருக்கும்: விராட் கோலி

Also Watch

First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...