ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : தென்னாப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை!

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : தென்னாப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை!

SAvSL

SAvSL

தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் டூ-பிளிஸிஸ் அதிகப்பட்சமாக 88 ரன்கள் குவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தென்னாப்பிரிகாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக ஹாசிம் அம்லா, மஹ்ரம் களமிறங்கினார்கள். மஹ்ரம் 21 ரன்கள் எடுத்திருந்த போது லக்மால் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டூ-பிளிஸிஸ் நிதானமாக ஆடினார். ஹாசிம் அம்லா, டூ-பிளிஸிஸ் இருவரும் அரைசதம் கடந்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ-பிளிஸிஸ் அதிகப்பட்சமாக 88 ரன்கள் குவித்தார்.

இதை தொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க வீரர் பெரேரா டக் அவுட்டாகி வெளியேறினார். இமலாய இலக்கை விரட்டிய இலங்கை அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் சிக்கி 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இலங்கை அணி சார்பில் கேப்டன் கருணாரத்னே 87 ரன்களும், மேத்யூவ்ஸ் 64 ரன்களும் எடுத்தனர்.

First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019