உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து!

போட்டியின் 13-வது ஓவரின் போது அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

Vijay R | news18
Updated: May 26, 2019, 10:44 PM IST
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து!
ICC World Cup 2019
Vijay R | news18
Updated: May 26, 2019, 10:44 PM IST
மழையின் காரணமாக  உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைத் தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளன. இன்று நடைபெற இருந்த பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதுவதாக இருந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழத்தியது. வெஸ்ட் அணிக்கு இதுவே முதல் பயிற்சி ஆட்டமாகும்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டி-காக், ஹாசிம் அம்லா களமிறங்கினார்கள். போட்டியின் 13-வது ஓவரின் போது தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை விடாமல் பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோத இருந்தன. இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடமாலே ஆட்டம் ரத்துச் செய்யப்பட்டது.
First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...