ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘பெரிய ப்ரஷர் இல்லை… ஆனால் கேட்சை விட்டார்’ – விராட் கோலியை விளாசும் அஃப்ரிடி

‘பெரிய ப்ரஷர் இல்லை… ஆனால் கேட்சை விட்டார்’ – விராட் கோலியை விளாசும் அஃப்ரிடி

கேட்ச்சை விட்ட விராட் கோலி. அஸ்வின், ரோகித் ரியாக்ஷன்

கேட்ச்சை விட்ட விராட் கோலி. அஸ்வின், ரோகித் ரியாக்ஷன்

பெரும்பாலும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில்தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஃபீல்டிங் தான் 70 சதவீத வெற்றியை தீர்மானிக்கிறது. – அஃப்ரிடி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அந்நாட்டு வீரர் எய்டன் மார்க்ரம் கேட்சை கோலி மிஸ் செய்தார். இந்த நிகழ்வு இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்த நிலையில், கோலியை விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி.

  8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 ஆட்டத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை எடுத்தார். இதன்பின்னர் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை, இந்திய பந்து வீச்சாளராக அருமையாக கட்டுப்படுத்தினர்.

  ''இந்தியாவை வெற்றி பெற்றால் வருத்தப்படுவோம்'' - சென்டிமென்டாக பேசிய வங்கதேச அணி கேப்டன்!

  ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாக இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ரம், அஷ்வின் பந்துவீச்சில் கொடுத்த ஈஸியான கேட்சை விராட் கோலி மிஸ் செய்தார்.

  அப்போது அவர் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன்பின்னர் சுதாரித்து விளையாடிய மார்க்ரம் சிக்ஸரும், ஃபோருமாக விளாசி 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரது கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கை மாறி, இந்தியா வெற்றிருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

  மார்க்ரம் கேட்ச் விடப்பட்ட நிலையிலும், தென்னாப்பிரிக்க அணி தட்டுத் தடுமாறி 19.4 ஓவரில்தான் வெற்றி பெற்றது. கேட்ச்சை மிஸ் செய்ததற்காக விராட் கோலியை பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

  கேட்ச்சை விட்ட விராட் கோலி. அஸ்வின், ரோகித் ரியாக்ஷன்

  இதுபற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கூறியதாவது-

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது விராட் கோலிக்கு அதிக பிரஷர் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அவர் எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாடும்படியான சூழல்தான் இருந்தது. அப்படி இருந்தும் கேட்சை விட்டுள்ளார்.

  டி20 உலககோப்பை தொடர்: ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய இலங்கை அணி

  கேட்ச்சுகள்தான் மேட்சுகளை வெற்றிகொள்ளும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். பெரும்பாலும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில்தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஃபீல்டிங் தான் 70 சதவீத வெற்றியை தீர்மானிக்கிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Shahid Afridi, Virat Kohli