ICC World Cup 2019 | சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இலங்கை அணி!

போட்டியின் 26வது ஆப்கன் பவுலர் நபி வீசினார். இந்த ஓவரில் தான் இலங்கை அணி மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ICC World Cup 2019 | சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இலங்கை அணி!
AFGvSL
  • News18
  • Last Updated: June 4, 2019, 9:02 PM IST
  • Share this:
ஆப்கானிஸ்தனுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த இலங்கை அணி 201 ரன்களில் சுருண்டது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தெடாரின் 7வது போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கருணாரத்னே, பெரேரா களமிறங்கினார்.


சிறந்த தொடக்கத்தை கொடுத்த இருவரும் அதிரடியாக விளையாடினர். இலங்கை அணி 92 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கருணாரத்னே 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய திருமன்னே நிதானமாக விளையாடி வந்தார்.

போட்டியின் 26வது ஆப்கன் பவுலர் நபி வீசினார். இந்த ஓவரில் தான் இலங்கை அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ஓவரில் இலங்கை அணியின் திருமன்னே, மென்டிஸ், மேத்யூஸ் ஆகியோர் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி 146 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இலங்கை அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்டசமாக பெரேரா  78 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.இதனிடையே போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் நீண்ட நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழைக்குபின் மீண்டும் தொடங்கிய போது ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

Also Watch

First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading