உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு!

1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட்-ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு!
EngVSa
  • News18
  • Last Updated: May 30, 2019, 2:58 PM IST
  • Share this:
உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-ல் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இத்தொடர், ஜூலை 14-ம் தேதி நிறைவடைகிறது.

இதில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.


ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட்-ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் டி-பிளிஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading