ICC World Cup 2019 | ஒரு பந்து கூட வீசாமல் பாகிஸ்தான் - இலங்கை போட்டி ரத்து!

#CWC19 | #PAKvSL | ஆட்டம் கைவிடப்பட்டதால்  இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 

ICC World Cup 2019 | ஒரு பந்து கூட வீசாமல் பாகிஸ்தான் - இலங்கை போட்டி ரத்து!
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: June 7, 2019, 8:39 PM IST
  • Share this:
பாகிஸ்தான் - இலங்கை போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் உலகக்கோப்பையில் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 7 ஆட்டங்களிலுமே பாகிஸ்தான் வென்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோத இருந்தன. பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி  மழையின் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது.


நீண்ட நேரம் காத்திருந்தும் மழை விடாததால் இன்றைய போட்டிய ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் கைவிடப்பட்டதால்  இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



உலகக் கோப்பை தொடரில் நாளை 2 போட்டிகள் நடைபெற உள்ளது. கார்டிப் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலபரிட்சை நடத்துகின்றன. இந்த 2 போட்டிகளிலும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும்.

Also Watch

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading