இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?

ICC World Cup 2019 | India vs England | இங்கிலாந்து அணியுடனான போட்டி நடைபெற உள்ள பிர்மிங்காம் மைதானம் சுழற்பந்திற்கு சாதகமானது.

Web Desk | news18
Updated: June 29, 2019, 5:30 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?
ICC World Cup 2019
Web Desk | news18
Updated: June 29, 2019, 5:30 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள்அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. நான்காவதாக உள்ளே செல்வதற்கு இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கடைசியாக இலங்கை, ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற நாளை இந்தியாவிற்கு எதிரான போட்யில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியடையாத அணியாக வலம் வருகிறது. அதை தக்கவைத்து கொள்ள இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதற்காக இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Shankar, விஜய் சங்கர்
விஜய் சங்கர்


காயம் காரணமாக விலகிய ஷிகார் தவானுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள விஜய் சங்கர் கடந்த 3 போட்டிகளிலும் எந்த வித சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் தேவைப்படுவதால் ரிஷப் பந்த் அணியில் இடம்பெறலாம்.

Loading...

Ravindra Jadeja, ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா


அதேப் போல் ஆல்-ரவுண்டரான கேதர் ஜாதவும் இதுவரை எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார். அதுவும் மிகவும் பொறுமையாக விளையாடியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. பந்துவீச்சிலும் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா எடுக்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணியுடனான போட்டி நடைபெற உள்ள பிர்மிங்காம் மைதானம் சுழற்பந்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவிந்திர ஜடேஜா அணியில் இடம்பெற அதிகப்படியான வாய்ப்புள்ளது. கேதர் ஜாதவின் மாற்றத்தால் இந்திய அணியில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த மாற்றங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கைகொடுக்கும் என்பதால் கேப்டன் கோலி அணியின் மாற்றத்தை ஏற்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...