ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘உலகக்கோப்பையை வெல்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல… இதை செய்தால் போதும்…’ - வியூகம் சொல்லும் அஷ்வின்

‘உலகக்கோப்பையை வெல்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல… இதை செய்தால் போதும்…’ - வியூகம் சொல்லும் அஷ்வின்

அஷ்வின்

அஷ்வின்

இந்தியாவில் வந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகளை இந்திய அணி வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக கோப்பையை வெல்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல என்று கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தொடரை பெறுவதற்கு சிலவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த தொடருக்கு தேவையான முக்கிய வீரர்கள் 20 பேரை தேர்வு செய்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அவர்களின் திறமையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிசந்திரன் அஸ்வின் கூறியதாவது - 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தான் விளையாடிய ஒவ்வொரு உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியாவில் வந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகளை இந்திய அணி வென்றுள்ளது.

உள்ளூர் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சதவீதம் என்பது 80% வரையில் இருக்கிறது. உள்ளூரில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவது, இந்திய அணிக்கு சாதகமான ஒன்றுதான். 2011 உலக கோப்பையில் இருந்து, போட்டியை நடத்தும் அணிகள் தான் வெற்றி பெற்று வருகின்றன. 2011-இல் இந்தியா, 2015 - இல் ஆஸ்திரேலியா, 2019 - இல் இங்கிலாந்து என போட்டியை நடத்திய அணிகள் தான் கோப்பையை பெற்றுள்ளது. எனவே உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது. தங்களது நிலைமை மற்றும் களங்களை அணிகள் சரியாக புரிந்து கொள்ள, வேண்டும். அதுதான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

First published:

Tags: Cricket, R Ashwin