Home /News /sports /

இந்தியாவிற்கு எதிரான வரலாற்றை மாற்றிக் காட்டுவோம்! இன்சமாம்-உல்-ஹக் உறுதி

இந்தியாவிற்கு எதிரான வரலாற்றை மாற்றிக் காட்டுவோம்! இன்சமாம்-உல்-ஹக் உறுதி

இன்சமாம்-உல்-ஹக்

இன்சமாம்-உல்-ஹக்

உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தியாவை மட்டுமல்ல அனைத்து அணிகளையும் வெல்லும் திறன் பாகிஸ்தான் அணிக்கு திறமை உள்ளது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது இல்லை என்ற கருப்பு சரித்திரத்தை இந்த முறை மாற்றி காட்டுவோம் என இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடமும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியே அதிகம் எதிர்பார்ப்புடன் உள்ளது.

Also Read :‘தோனி’ என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்! வைரலாகும் வீடியோ

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பல போட்டிகளில் வெற்றியையும், தோல்வியையும் மாற்றி மாற்றி ருசித்து இருந்தாலும் உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வென்றது இல்லை . அந்த சாதனையை இதுவரை இந்தியா தக்கவைத்து கொண்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் இன்சமாம்-உல்-ஹக் கராச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவுடனான வெற்றியை கவுரமாக நினைக்கின்றனர். ஆனால் உலகக் கோப்பையில் ஒரு முறை கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது இல்லை.

Also Read : 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்: மறக்கமுடியாத டிராவிட் – கங்குலியின் வரலாற்று சாதனை!

தற்போது பாகிஸ்தான் அணி வலிமையாக உள்ளது. இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைப்போம். உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தியாவை மட்டுமல்ல அனைத்து அணிகளையும் வெல்லும் திறன் பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.

இந்த தொடரில் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோற்றுவிட்டதால் எங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வரும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தும்“ என இன்சாம் தெரிவித்துள்ளார்.

Also Read : இங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்!

Also Read :பாகிஸ்தானிலும் கிங் ‘தல’ தோனி தான்! வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி