உலகக் கோப்பை: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!

#ICCWorldCup2019 | #ICCCricketWorldCup2019 | #EngVSA | உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து அணி தொடங்கி உள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலகக் கோப்பை: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!
EngvSA
  • News18
  • Last Updated: May 30, 2019, 10:43 PM IST
  • Share this:
உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. தொடக்க போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை, முதல் ஓவர் வீச டூபிளெசிஸ் அழைத்தார்.


இதற்கு, கை மேல் பலனும் கிடைத்தது. இரண்டாவது பந்திலேயே, பேரிஸ்டோவ்வை, டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார் இம்ரான்தாஹிர். அடுத்ததாக, ஜோடி சேர்ந்த ஜேசன்ராய், ஜோ ரூட் இணை நிதானமாக ஆடியது. ஜேசன் ராய் 54 ரன்களும், ஜோ ரூட் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் இயான் மோர்கன் 57 ரன்கள் குவித்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் குவித்தார்.முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் தடுமாறாத இங்கிலாந்து அணி  50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹீர், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஹாசிம் அம்லா ஆர்சர் வீசிய பந்தில் காயமடைந்தார். இதையடுத்து போட்டியிலிருந்து விலகினார். அடுத்து வந்த மார்க்ராம் 11 ரன்னிலும், கேப்டன் டூபிளெசிஸ் 5 ரன்னிலும் அவுட்டாகினார்.இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி  வீரர் ஆர்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து அணி தொடங்கி உள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாளை நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Also Watch : விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா?

First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading