Home /News /sports /

வீழ்த்தக் காத்திருக்கும் எதிரணிகளை விரட்டுமா விராட் கோலி படை?

வீழ்த்தக் காத்திருக்கும் எதிரணிகளை விரட்டுமா விராட் கோலி படை?

ICC World Cup 2019

ICC World Cup 2019

வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14 வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறயுள்ளது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் எவை எவை? இந்திய அணியின் பலம் என்ன? என்பதை  இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இந்த முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் களைகட்டுகிறது.

சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள், தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த திருவிழா, வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14 வரை களைகட்டவுள்ளது.

உலக கோப்பையில் இடம் பெறும் அணிகளின் கேப்டன்கள்


இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் பங்கேற்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 1983 மற்றும் 2011-ம் ஆண்டு நினைவுகளை விராட் கோலி மீண்டும் அரங்கேற்றுவாரா என இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ரோஹித் சர்மா, ஷிகர் தவான் , விராட் கோலி, கேதர் ஜாதவ், தோனி , கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர்.

ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் எதிரணியை மிரட்ட காத்திருக்கின்றனர்.

வேகப்பந்துவீச்சில் மிரட்ட புவனேஷ்வர் குமார், பும்ரா, சமி ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் சுருட்ட குல்தீப், சஹல் ஆகியோரும் தயாராக உள்ளனர்.

விராட் கோலி தலைமையில் அனுபவம் கலந்த இளம் படை, இந்த முறை கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகளை விராட் கோலி படை தகர்த்தெறிந்து கோப்பையை உச்சிமுகர்வதே நமக்கான கிரிக்கெட் விருந்தாக அமையும்.

Also see... உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி

Also see...




தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: ICC Cricket World Cup 2019, World cup cricket 2019

அடுத்த செய்தி