உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
தினேஷ் கார்த்திக்கிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், விஜய் சங்கர் சில போட்டிகளில் விளையாடினார்.
3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கர், 58 ரன்களை எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எதிர்பாராதவிதமாக வலைப்பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தால் அவர் கடந்த போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விஜய் சங்கர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக ஷிகர் தவானை தொடர்ந்து விஜய் சங்கர் விலகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு சப்போர்ட் செய்யும் பாகிஸ்தான், பங்களாதேஷ்... வைரல் மீம்ஸ்
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.