Home /News /sports /

கிரிக்கெட் ரசிகர்களுக்கு த்ரில் விருந்தாக அமைந்த நேற்றைய இரண்டு போட்டிகள்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு த்ரில் விருந்தாக அமைந்த நேற்றைய இரண்டு போட்டிகள்!

மேற்கு இந்திய தீவுகளுடனான தொடரில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

மேற்கு இந்திய தீவுகளுடனான தொடரில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி, நியூசிலாந்திடம் போராடி தோற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 28-வது லீக் ஆட்டம் சவுதாம்படன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா பத்து ரன்களில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுலுடன் இணைந்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லோகேஷ் ராகுல் முப்பது ரன்களில் வெளியேறியதை அடுத்து, விஜய் சங்கர், கோலி உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. இதனைதொடர்ந்து தனது அரைசதத்தை பதிவு செய்த கேப்டன் கோலி, 67 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்

பின்னர் தோனி மற்றும் கேதர் ஜாதவ் பொறுமையுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் தோனி 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது ஷமி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியாக, சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ், 52 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக, குல்பதீன் நைப் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் குல்பதீன் களமிறங்கினர். பத்து ரன்களிலேயே ஹசரத்துல்லா வெளியேறினார். அடுத்ததாக குல்பதீனுடன், ரமத் ஷா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பதீன் 27 ரன்களிலும், ரமத் ஷா 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஹஸ்மத்துல்லா 21 ரன்களும், ரஜிபுல்லா 21 ரன்களும், ரஷித் கான் 14 ரன்களும் எடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.

7 விக்கெட்டுகளை இழந்த ஆஃப்கானிஸ்தான் அணி, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி களத்தில் இருந்தார்.

முகம்மது நபி


கடைசி ஓவரை ஷமி வீசிய நிலையில், முதல் பந்திலேயே முகமது நபி பவுண்டரி விளாசி தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து, 52 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த அலம் மற்றும் ரஹ்மான் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக, முகமது ஷமி அபாரமாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனை பெருமையை அடைந்துள்ளார் ஷமி. 1987-ம் ஆண்டு, சேத்தன் சர்மாவுக்கு பிறகு உலகக்கோப்பையில் இந்திய வீரர் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.

முகம்மது சமி


முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே சேர்த்து, போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா, சாஹல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.



பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பைத் தொடர்களில், இந்திய அணி அதன் 50வது வெற்றியை பதிவு செய்துள்ளது

இதேபோல் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது.



வில்லியம்சன் அபாரமாக விளையாடி, 148 ரன்கள் விளாசினார். மேற்கு இந்தியத் தீவுகள் சார்பாக, காட்ரெல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கெயில் 87 ரன்கள் எடுத்தார். ஹெத்மியர் 54 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த பிராத்வெயிட் 101 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு விக்கெட் மீதமிருந்தது, வெற்றிக்கு வெறும் ஆறு ரன்களே தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக தூக்கி அடித்தார்.



மைதானத்தில் இருந்த அனைவரும் ஆறு ரன்கள் என்று எண்ணியிருந்தபோது, பவுண்டரி லைனில் நின்றிருந்த போல்ட் அபாரமாக கேட்சை பிடித்தார். இதனால் 286 ரன்களுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.



நேற்றைய 2 போட்டிகளுமே இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து இரத்த அழுத்தத்தை எகிற வைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உலகக்கோப்பையில் விறுவிறுப்பாக 2 போட்டிகள் நடந்துள்ளது ரசிகர்களை திருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Also Read..

சாரி சர்பராஸ்.... மோசமாக கேலி செய்த ரசிகர் வருத்தம்

தோனிக்கா இந்த நிலைமை...

இந்திய அணியின் மந்தமான பேட்டிங்கிற்கு என்ன காரணம்?

மைதானம் அதிர முத்தத்தில் மலர்ந்த காதல்

 




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Sankar
First published:

Tags: ICC Cricket World Cup 2019

அடுத்த செய்தி