ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன்? தோனி விளக்கம்

சென்னை சேப்பாக்த்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி அதிரடியா விளையாடி கடைசி பந்து வரை போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன்? தோனி விளக்கம்
கேப்டன் தோனி
  • News18
  • Last Updated: April 24, 2019, 9:34 PM IST
  • Share this:
சென்னை சேப்பாக்த்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் களமிறங்காதது ஏன் என்று கேப்டன் தோனி விளக்கமளிததுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 176 ரன்கள் குவித்தது. வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறி உள்ளது.

சென்னை சேப்பாக்த்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி கடைசி பந்து வரை போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். இந்த போட்டியிலும் அவரது அதிரடி தொடரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை கேப்டன் தோனி களமிறங்கவில்லை.இது தொடர்பாக கேப்டன் தோனி கூறுகையில், முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு தொடர்ந்து பிரச்னையாக உள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில், முழு உடற்தகுதி உடன் இருக்க விரும்புகிறேன். இதை நினைவில் கொண்டு தான் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்