ICC World Cup 2019 | இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து ஒருமுறையும், வங்கதேசம் 2 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளது.

ICC World Cup 2019 | இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு
ENGvBAN
  • News18
  • Last Updated: June 8, 2019, 3:00 PM IST
  • Share this:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டம்  கார்டிப்பில் நடைபெற உள்ளது. இதில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக உள்ளது. அந்த அணி தனது முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் ஜோரூட். பட்லர் ஆகியோர் சதம் அடித்தும் வெற்றி பெற முடியாமல் போனது.


வங்கதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி வீழ்ந்தது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. எனவே இந்த ஆட்டம் வங்கதேச அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து ஒருமுறையும், வங்கதேசம் 2 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளது.இன்றைய ஆட்டத்தை பொருத்தவரை இங்கிலாந்து அணியில் மோர்கன், பட்லர், ஜோரூட், ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்த ஐவர் படை தங்களது பணியை சரியாக செய்தாலே இங்கிலாந்தின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிடும்

வங்கதேசத்தை பொருத்தவரை பேட்டிங்கில் ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பாலும், ஆல்ரவுண்டர்களில் முஸ்டபிகுர் ரஹ்மானும், பந்துவீச்சாளர்களில் மெஹிடி ஹாசன் மற்றும் மோர்தசா நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.

Also Watch

First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading