உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு என்ன வேலை இருக்கும் என்பதை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு பிசிசிஐ தேர்வுக்குழு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே, அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி இருக்கிறார்.
2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில், உலகக்கோப்பை அணியில் தனக்கு என்ன வேலை இருக்கும் என்பதை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தெரிவித்த கருத்துகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

தினேஷ் கார்த்திக். (BCCI)
அதில், “2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நான் இடம் பிடிப்பதற்காக 2017 -ம் ஆண்டியிலே எனது பயணத்தை தொடங்கியிருந்தேன். தோனியை வைத்து கணக்கிட்டால், நான் இந்திய அணியுடன் பயணிக்கும் ஒரு சிறிய முதலுதவிப் பெட்டி போலத்தான். அவருக்குக் காயம் ஏற்பட்டால், அந்த நாளுக்கு முதலுதவியாக மட்டுமே நான் களத்துக்குச் செல்வேன்” என அவர் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “மாறாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் 4 -வது இடத்தில் இறங்கியும் விளையாட முடியும். அல்லது கடைசிக் கட்டத்தில் ஒரு ஃபினிஷராகவும் செயல்படமுடியும் ” தினேஷ் கார்த்திக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO | வைரலாகும் ஸிவா தோனியின் புதிய வீடியோ!
VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!
#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!
3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.