Home /News /sports /

#WorldCup2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்!

#WorldCup2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்!

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

#WorldCup2019: #TeamIndia’s travel plans disturbed with #JetAirways suspending its flights | மே 22-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக திட்டமிட்டபடி இந்திய அணி புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த வாரம், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    india-team
    உலகக்கோப்பைக்கான இந்திய அணி.


    பிரதான போட்டிகளுக்கு முன்னதாக, மே 25-ம் தேதி பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து உடன் விளையாட உள்ளது. மே 22-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

    ஆனால், கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானச் சேவையை முழுவதுமாக நிறுத்தியது. அந்த விமானத்திலேயே இந்திய அணி வீரர்கள் பயணம் செய்ய 30 பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், திட்டமிட்டபடி இந்திய அணி புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    jet airways, ஜெட் ஏர்வேஸ்
    ஜெட் ஏர்வேஸ்.


    இதனை அடுத்து, மற்ற விமானங்களில் பயணம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து வீரர்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. சில வீரர்கள் தங்களது இருக்கை வசதிகளை சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!

    மோடி, ராகுலை மறந்திடுங்க.. ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ - நெட்டிசன்களால் ட்விட்டரில் பரபரப்பு!

    தோற்றாலும் தல தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்கள்!

    VIDEO | தோனியின் மிரட்டல் அடியால் காணாமல் போன பந்து!

    தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!

    VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

    இதுலயும் தோனி தான் நம்பர் 1!

    தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: BCCI, ICC world cup, Indian cricket team, Jet Airways, MS Dhoni, Virat Kohli, World cup cricket 2019

    அடுத்த செய்தி