அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது? சாத்தியக்கூறுகள் என்ன?

அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது? சாத்தியக்கூறுகள் என்ன?
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: July 4, 2019, 7:38 AM IST
  • Share this:
நடப்பு உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 3 அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டன. 4-வது அரையிறுதி வாய்ப்பை பெற போகும் அணி எது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

12-வது உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டன. ஏற்கனவே 5 அணிகள் போட்டியில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் 4-ம் இடத்தைப் பிடிப்பதற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நியூசிலாந்து அணி


தற்போதைய நிலவரப்படி, நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் விகிதம் 0.175 ஆகும்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணிக்கு இதுவரை 8 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன இதில் 4-ல் வெற்றி, 3-ல் தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 9 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் நெட் ரன் விகிதம் மைனஸ் 0.792 ஆகும்.
PAKvSA


பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு

பாகிஸ்தான் அணி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றாலும் பதினோரு புள்ளிகளை பெற்று லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதுதான். காரணம், பாகிஸ்தான் அணியை விட நியூசிலாந்தின் நெட் ரன் அதிகம். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி கனவு நனவாகும்.

லாட்ஸில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் 300-க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்வது அவசியம். அதாவது, பாகிஸ்தான் 400 ரன்கள் எடுத்தால், வங்கதேசத்தை 84 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும்.

அதுவே, 350 ரன்கள் எடுத்தால், 38 ரன்களுக்குள் வங்கதேசத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை நியூசிலாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதே இதுவரை மிகப்பெரிய வெற்றியாகும். இந்த சாதனையை பாகிஸ்தான் உடைத்தால் மட்டுமே அதன் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.



இந்த போட்டியில் உள்ள மற்றொரு சிக்கல் டாஸ். பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே இந்த மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஒருவேளை வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-வதாக பேட்டிங் செய்ய நேர்ந்தால் நிச்சயமாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாது. எப்படி பார்த்தாலும் பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு என்பது மிக மிக சொற்பமே.

Also see... ட்ராஃபிக் போலீசாரை ’லெஃப்ட் அன்ட் ரைட்’ வாங்கிய வாகன ஓட்டி!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading