இந்தியாவின் வெற்றிக்காக தவம் கிடக்கும் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள்!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரே இங்கிலாந்தை இந்தியா வென்று பாகிஸ்தானுக்கு உதவவேண்டும் எனக் கூறியுள்ளார்.

news18
Updated: June 30, 2019, 12:16 PM IST
இந்தியாவின் வெற்றிக்காக தவம் கிடக்கும் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள்!
பாகிஸ்தான் ரசிகர்கள்
news18
Updated: June 30, 2019, 12:16 PM IST
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இந்திய அணியின் வெற்றிக்காக பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களும், வங்கதேச ரசிகர்களும் தவம் கிடக்கின்றனர்.

இந்தியாவில் கிரிக்கெட்டை ரசிக்காதவர்கள் குறைவு. ஆனால் கிரிக்கெட்டை விரும்பாதவர்களையும் கூட ஈர்க்கும் தன்மை இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு உண்டு, இருநாடுகளுக்கிடையே நடக்கும் போட்டியை கிட்டத்தட்ட போர்க்களம் போலவே கருதும் ரசிகர்கள் இருபக்கமும் அதிகம். கடைசி ஓவர்களி்ல் ஆர்வத்துடனும், வெறித்தனமாகவும், இஷ்ட தெய்வத்திடம் வேண்டியபடியும் இருப்பார்கள்.

அதனால் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டிகளில் களத்திலும் அனல் தெறிக்கும். உதாரணத்திற்கு 1996ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்துக்கும், ஆமிர் சோஹைலுக்கும் நடந்த மோதலை சொல்லலாம்.




Loading...



உலகக் கோப்பையில் தோற்றாலும் பரவாயில்லை பாகிஸ்தானை வென்றால் போதும் என்போரும் உண்டு. பாகிஸ்தானிலும் அதே நிலைமைதான், இந்தியாவிடம் தோற்ற பின் கேப்டன் சர்பராஸ் அகமதுவை 'குண்டு பன்றி' என கூறுமளவிற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் கடுப்படைந்தனர்.

எனினும் இந்தியா மீதிருக்கும் கோபத்தையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு இன்று, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

இந்திய அணி


ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இந்த உலகக் கோப்பை தொடரில் தட்டுத்தடுமாறி ஆடிவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிடமே நூலிழையில் வென்றது. இன்னும் ஒரே ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் நான்காமிடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பெரிதும் நம்பி உள்ளது.

முக்கியமாக இங்கிலாந்து கடும் போட்டியாக இருப்பதால் அந்த அணி தோற்கவேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்கள் விருப்பம். இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோற்றால் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து பின்தங்கும். அதனால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இதுபோல் இங்கிலாந்து தோற்றால் வங்கதேசத்தின் வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால் அந்நாட்டு ரசிகர்களின் நிலைப்பாடும் இதுதான்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரே இங்கிலாந்தை இந்தியா வென்று பாகிஸ்தானுக்கு உதவவேண்டும் எனக் கூறியுள்ளார். மற்றொரு வீரரான பாசித் அலி இந்தியா வேண்டுமென்றே இன்று வெற்றிக்காக போராடும் என கூறியுள்ளார்.



இது ஒருபுறமிருக்க ட்விட்டரில் இது பற்றிய நகைச்சுவையான பதிவுகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. சாரா கான் எனும் பாகிஸ்தான் ரசிகை, முதல் முறையாக கனத்த இதயத்துடன் எங்கள் பரம எதிரியின் வெற்றிக்காக ஆதரவளிக்கப்போகிறேன் என பதிவிட்டுள்ளார்

மற்றொருவர் 1947க்குப் பிறகு 120 கோடி இந்தியர்கள், 20 கோடி பாகிஸ்தானியர்கள் மற்றும் 1.6 கோடி வங்கதேசத்தினர் ஒருசேர இந்தியா வெற்றிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார். இவ்வாறாக இந்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்களை ஒன்றிணைத்துள்ள

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்களின் வேண்டுதல்கள் பலிக்க இந்திய அணி உதவுமா அல்லது அந்நாட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

புதிய ஜெர்சியை கலாய்க்கும் மீம்ஸ்கள்:



புதிய ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்:

First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...