இந்தியாவுக்கு பாகிஸ்தான்... நியூசிலாந்துக்கு தென்னாப்பிரிக்கா...! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள் இதோ...

ஒரு இன்னிங்ஸில் விராட் கோலியிடம் முதல் இடத்தை ஆம்லா கோட்டை விட்டுள்ளார்.

news18
Updated: June 20, 2019, 9:38 AM IST
இந்தியாவுக்கு பாகிஸ்தான்... நியூசிலாந்துக்கு தென்னாப்பிரிக்கா...! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள் இதோ...
(Image: ICC)
news18
Updated: June 20, 2019, 9:38 AM IST
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டிகளின் சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்.

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

அதேவேளையில் தொடர் தோல்விகளை அடைந்த தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்துள்ளார். 176 இன்னிங்ஸ் விளையாடி அதிவேகமாக 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஆம்லா நிகழ்த்தியுள்ளார்.

175 இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்த விராட் கோலி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் முதல் இடத்தை ஆம்லா கோட்டை விட்டுள்ளார்.

2000, 3000, 4000, 5000, 6000, 7000 ரன்கள் மைல் கல்லை குறைந்த இன்னிங்ஸில் கடந்த வீரர் என்ற சாதனை ஆம்லாவிடம் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் டேவிட் மில்லர் நேற்றைய போட்டியில் 9 ரன்களை கடந்த போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்தார்.

125 இன்னிங்சில் விளையாடிய மில்லர், இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போலவே நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா அணிகள் திகழ்கின்றன.

2003 முதல் 2019 வரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை தொடர்ச்சியாக ஐந்து முறை வீழ்த்தி நியூசிலாந்து அணி அசத்தல் சாதனை நிகழ்த்தியுள்ளது.நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 35 ரன்கள் எடுத்திருந்த போது கிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பவுண்டரி அடிக்க முயலும் போது கால் ஸ்டெம்பில் பட்டதால் பெய்ல்ஸ் கீழே விழுந்தது. இதனால் கப்டில் பறிதாபமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...