Video: உலகக்கோப்பையில் இதை மறக்க முடியுமா? அமீர் சோஹல் சேட்டையை அடக்கிய வெங்கடேஷ் பிரசாத்

#ICCWorldCup | ஐசிசி உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை இதுவரை 6 முறை தோற்கடித்துள்ளது.

Vijay R | news18
Updated: May 17, 2019, 9:19 PM IST
Video: உலகக்கோப்பையில் இதை மறக்க முடியுமா? அமீர் சோஹல் சேட்டையை அடக்கிய வெங்கடேஷ் பிரசாத்
World Cup Moments
Vijay R | news18
Updated: May 17, 2019, 9:19 PM IST
உலகக்கோப்பை போட்டி என்றாலே அதற்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அதுவும் பாகிஸ்தான்-இந்தியா இடையிலான போட்டிகள் என்றால் சொல்ல தேவையே இல்லை! போட்டியில் வீரர்களுக்கு நடுவே வாக்குவாதம், கருத்து மோதல், வெற்றி கொண்டாட்டம் என சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும்.

ஐசிசி உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை இதுவரை 6 முறை தோற்கடித்துள்ளது. அனைத்து போட்டிகளும் ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கும் விதமாக பரபரப்பாகவே இருக்கும். அதிலும் 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இதுப் போன்ற போட்டிகள் ரசிகர்கள் நினைவிலிருந்து என்றும் நீங்காது.

Also Watch : #ICCWorldCup2019: சச்சினின் 16 வருட சாதனையை யாராவது முறியடிப்பார்களா?

அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் 1996ம் வருட உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் அமீர் சோஹலுக்கும், வெங்கடேஷ் பிரசாத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதம். மார்ச் 9, 1996ல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலகக்கோப்பை காலிறுதி போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் அசாரூதின் பேட்டிங்கை தேர்வு செய்தார். சித்து மற்றும் அஜய் ஜடேஜா அதிரடியால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்திருக்கும். சித்து 93 ரன்களும், ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் விளாசி இருப்பார்கள். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரகள் முடிவில் 248 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Also Watch :முதல் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஒரு ‘தமிழர்’!

இந்தப் போட்டியில் 15வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் வீசுவார். ஓவரின் 5வது பந்தை அமீர் சோஹல் இறங்கி வந்து பவுண்டரி விளாசுவர். விளாசியதுடன் வெங்கடேஷ் பிரசாத்தை கேலி செய்யும் வகையில் பவுண்டரி போன திசையை நோக்கி கைநீட்டி காண்பித்து “அடி எப்புடி'' என்பது போல் சைகை செய்வார்.
Loading...
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத் ஆக்ரேஷமாக வீசிய அடுத்த பந்தில் சிக்கி சோஹல் கிளின் போல்ட் ஆவார். சோஹலுக்கு பதிலடி கொடுத்த பிரசாத் உற்சாகத்தில் துள்ளி குதிப்பார். பல வருடங்கள் கழித்தும் அந்த நிகழ்வை இன்று பார்த்தாலும் அனைவருக்கும் சிலிர்ப்பாகவே இருக்கும்.



Also Watch : அடுத்த கேப்டன் ரோகித் சார்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்

Also Watch

First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626