ICC World Cup 2019 | இந்தியா உடன் இன்று மோதல்... முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆப்கானிஸ்தான்...?

இன்றைய போட்டி நடைபெறும் இதே சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஏற்கனவே தென்ஆப்ரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ICC World Cup 2019 | இந்தியா உடன் இன்று மோதல்... முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆப்கானிஸ்தான்...?
இந்தியா - ஆப்கானிஸ்தான்
  • News18
  • Last Updated: June 22, 2019, 7:57 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியில் முன்னேற்றம் காண இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தவிர எஞ்சிய 9 அணிகளும் 5 மற்றும் அதற்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிவிட்டன. இந்நிலையில், இந்தியா, தனது 5-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. இப்போட்டி, சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் உள்ள ரோஸ் பவுல் (Rose Bowl) மைதானத்தில், பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை ஆடிய லீக் ஆட்டங்களில் முன்னணி அணிகளான தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி வலுவான அணியாக உலா வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.


இந்திய அணி


இந்திய அணி, லோகேஷ் ராகுல், ரோஹித், கோலி, தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அத்துடன், பந்துவீச்சில் பும்ரா, குல்தீப், சஹால் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர்.

பயிற்சியின்போது ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதில், தினேஷ் கார்த்திக் அல்லது ரி‌ஷப் பந்த்-துக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் காயம் ஏற்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக முகமது ‌ஷமி இடம்பெறுவார்.எனவே, இந்தியாவை ஆப்கானிஸ்தான் சமாளிக்குமா என்பதைவிட, எப்படி எதிர்கொள்ளும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

குல்பதீன்- ஆப்கானிஸ்தான்


அதேவேளையில், குல்பதீன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட ஆப்கானிஸ்தான், வெற்றி கணக்கை தொடங்கவே போராடி வருகிறது.

மேலும், இன்றைய போட்டி நடைபெறும் இதே சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஏற்கனவே தென்ஆப்ரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது. எனவே, மைதானத்தின் தன்மையை இந்திய வீரர்கள் அறிந்திருப்பர் என்பதால் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Also see... உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019





உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading