நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம்... ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த பாபர் ஆசம்...!

news18
Updated: June 27, 2019, 9:16 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம்... ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த பாபர் ஆசம்...!
பாபர் ஆசம்
news18
Updated: June 27, 2019, 9:16 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த அணியின் பாபர் ஆசம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மன்றோ 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


Loading...நிதானமாக ஆடிய வில்லியம்சன் 41 ரன்களையும், கிராண்ட்ஹோம் 64 ரன்களையும் எடுத்தனர். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நீஷம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிவரை ஆட்டமிழக்காத அவர், 97 ரன்களைக் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் சமன், 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம்-உல்-ஹக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், முகம்மது ஹபீஸ் 32 ரன்களிலும், ஹாரிஸ் சோகைல் 68 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 49.1 ஓவர்களில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் ஆசம், 101 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த 25 வயதுக்குள்ளான வீரர்கள் பட்டியலில் பாபர் ஆசம் ஐந்தாவதாக இணைந்துள்ளார்.

1996-ம் ஆண்டில் டெண்டுல்கர் 523 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 2007-ல் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 372 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 1999-ல் ரிக்கி பாண்டிங் 354 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

ஒருநாள் போட்டிகளில் விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் பாபர் ஆசம் படைத்துள்ளார். 68 இன்னிங்ஸ்கள் விளையாடி அவர் இந்த சாதனையை வசப்படுத்தியுள்ளார். முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார்.மேலும், 32 ஆண்டுகளுக்குப் பின் உலககோப்பையில் பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி சதமடித்தவர் என்ற பெருமைக்கும் பாபர் ஆசம் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

Also See...

1992 உலகக்கோப்பையில் நடந்தது போல தற்போது கிடைத்த வெற்றி... சாம்பியன் கனவில் பாகிஸ்தான்..!

இது எங்களுடைய உலகக்கோப்பை - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...