2007-ல் நான், இன்று ராயுடு... உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து கம்பீர் விளாசல்!

#WorldCup2019: #AmbatiRayudu's Exclusion More ‘Heartbreaking’ Selection #GautamGambhir | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

2007-ல் நான், இன்று ராயுடு... உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து கம்பீர் விளாசல்!
அம்பதி ராயுடு. (BCCI)
  • News18
  • Last Updated: April 16, 2019, 7:28 PM IST
  • Share this:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாதது நெஞ்சு வெடிக்கும் நிகழ்வுபோல் இருக்கிறது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடும் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், இந்திய அணி தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Gautam gambhir, கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர் (File)


பிடிஐ நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது குறித்து எந்த விவாதமும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், 48 பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஒருவரை, அதுவும் 33 வயதே ஆகும் ராயுடுவை தேர்வு செய்யாமல் போனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். இதுதான் உண்மையில் நெஞ்சு வெடிக்கும் சம்பவம்” என்று கூறினார்.மேலும், “ராயுடுவுக்காக மிகவும் வருந்துகிறேன். 2007-ல் இதே நிலைமையில்தான் நானும் இருந்தேன். அப்போது என்னை தேர்வுக்குழுவினர் உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை. உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தும் என எனக்கு நன்றாக தெரியும்” என்று கம்பீர் வேதனை தெரிவித்தார்.

பெங்களூருவின் பவுலிங் படுமோசம்... கலாய்த்த ஹர்திக் பாண்டியா!

சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!

தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading