முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய அணி!

டி20 மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய அணி!

டி20 மகளிர் உலகக்கோப்பை

டி20 மகளிர் உலகக்கோப்பை

வெற்றிக்கு 173 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaCape Town

டி20 மகளிர் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதில் சிறப்பாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார்.

இதனையடுத்து வெற்றிக்கு 173 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்தனர். ஆனால் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இந்திய அணி இழந்து கொண்டே வந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே வரை நெருங்கியது இந்திய அணி.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 7வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ind Vs Aus, T20 World Cup