மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக டாட்டின் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்ற வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினாலும் தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் 128 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூசிலாந்து அணி துரத்தியது. அந்த அணியில் கேப்டன் சோஃபி டெவின் அதிரடியாக விளையாடி 127 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். பின் வரிசையில் விக்கெட் கீப்பர் கேட்டி மார்ட்டின் 44 ரன்கள் சேர்த்தார்.
Also Read : 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
இறுதியாக கடைசி ஓவரில் 7 விக்கெட்களை இழந்து இருந்த நியூசிலாந்து வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்து. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் யாரும் எதிர்பாராத நிலையில் டாட்டின் பந்துவீசினார். இந்த போட்டியில் இது அவருக்கு முதல் ஓவராக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுது்தியது.
ஆனால் டாட்டின் சிறப்பாக பந்துவீசி முதல் பந்தில் ஒரு ரன், 2-வது பந்தில் விக்கெட், 3-வது பந்தில் ஒரு ரன், 4-வது பந்தில் விக்கெட்டை எடுத்தார். இதனால் நியூசிலாந்து வெற்றி பெற 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. டாட்டின் 5-வது பந்தில் நியூசிலாந்து வீரரை ரன் அவுட் செய்ய வெஸ்ட் இண்டீஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.