இங்கிலாந்து தோல்வியின் விளிம்பிலிருந்த போதும் அந்த அணியின் வீராங்கனை கேத்ரின் ப்ரண்ட் எதிரணி வீராங்கனையை மான்கட் செய்ய கிடைத்த வாய்ப்பை பெருந்தன்மையோடு மறுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. பரபரப்பான இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவிற்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கேத்ரின் ப்ரண்ட் வீசினார். கேத்ரின் ப்ரண்ட் பந்துவீச வந்தபோது நான் ஸ்டிரைக்கரில் நின்று கொண்டிருந்த சுனே லூஸ் கீரிஸை விட்டு வெளியேற, பந்துவீச வந்த கேத்ரின் ப்ரண்ட் பந்தை வீசாமல் நின்றுவிட்டார்.
அவரை மான்கட் செய்ய வாய்ப்பிருந்தும் வெறும் எச்சரிக்கையோடு நிறுத்திய கேத்ரின், அடுத்த பந்தை வீச தென்னாப்பிரிக்காவின் மிக்னான் டு ப்ரீஸால் அதனை சிக்சருக்கு விளாசினார். இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் தென்னாப்பிரிக்கா இலக்கை எட்டியது.
Also Read : என்னது சூசின் டெண்டுல்கரா..? டிரம்பின் உரையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வரிசையில் இணைந்த ஐசிசி
வெற்றிக்கு சில ரன்களே தேவை என்ற நிலையிலும், எதிரணி வீரரை மான்கட் முறையில் அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தும். அதை பெருந்தன்மையாக மறுத்த கேத்ரின் ப்ரண்ட் செயல் தற்போது வைரலாகி வருகிறது. கேத்ரின் ப்ரண்டின் இந்த செயலை இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். போட்டியில் வெற்றியடைவதை விட ரசிகர்களின் மனதில் வெற்றியடைவதே முக்கியம் என்பதை இந்த சம்பவம் எடுத்தக்காட்டியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.