முகப்பு /செய்தி /விளையாட்டு / Women’s T20: உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்… நேரலையாக பார்ப்பது எப்படி?

Women’s T20: உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்… நேரலையாக பார்ப்பது எப்படி?

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கேப்டவுனின் நியூலேண்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.30-க்கு தொடங்குகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிருக்கான ஐசிசி டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30- மணிக்கு ஆரம்பம் ஆகிறது. போட்டியை நேரலையாக பார்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கேப்டவுனின் நியூலேண்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.30-க்கு தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகியவை குரூப் ஏ-விலும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் குரூப் பி-யிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் போட்டியை லைவாக பார்க்கலாம்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் : ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங், ஷிகா பாண்டே, தேவிகா வைத்யா, தேவிகா வைத்யா தியோல், அஞ்சலி சர்வானி. பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் : முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூப்(கேப்டன்), ஒமைமா சொஹைல், நிதா தார், அலியா ரியாஸ், சித்ரா நவாஸ்(விக்கெட் கீப்பர்), பாத்திமா சனா, நஷ்ரா சந்து, ஜவேரியா கான், அய்மான் அன்வர், சாடியா இக்பால், ஆயிஷா நசீம், துபா ஹாசன் , சதாஃப் ஷமாஸ்

First published:

Tags: Cricket