ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. கேப் டவுன் நகரில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய இளம் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சீனியர் அணியும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
மகளிர் உலககோப்பை அட்டவணையில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, ஐயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பாகிஸ்தானை நாளை மறுநாள் சந்திக்கிறது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவிலுள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, ICC, ICC Women’s World T20, T20 World Cup