2022 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட் சேர்ப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijay R | news18-tamil
Updated: August 13, 2019, 3:55 PM IST
2022 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட் சேர்ப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாதிரி படம்
Vijay R | news18-tamil
Updated: August 13, 2019, 3:55 PM IST
2022 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022 காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை இணைக்க வேண்டுமென்பது உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கிரிக்கெட் ரசிகர்களின் கனவை தற்போது நிறைவேறி உள்ள நிலையில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 மகளிர் அணிகள் பங்கேற்கின்றன.


பெண்கள் கிரிக்கெட்டிற்கும், உலக கிரிக்கெட் போட்டிக்கும் இது ஒரு உண்மையான வரலாற்று தருணமாகும். இந்த முயற்சியை நாங்கள் கூட்டாக ஆதரிப்போம் என ஐசிசி தலைமை நிர்வாகி மனு சாவ்னி கூறியுள்ளார்.

1998ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக ஆண்கள் 50 ஓவர் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றது.

Also watch

Loading...

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...