#WomensT20Challenge: மகளிர் ஐ.பி.எல் 2-வது போட்டி... மிதாலி ராஜ் அணி வெற்றி!

#WomensT20Challenge: #Velocity won by 3 wickets vs #Trailblazers | 3 போட்டிகளின் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். #WIPL #TBLvVEL

#WomensT20Challenge: மகளிர் ஐ.பி.எல் 2-வது போட்டி... மிதாலி ராஜ் அணி வெற்றி!
பேட்டிங்கில் வெலாசிட்டி அணி வீராங்கனைகள். (BCCI)
  • News18
  • Last Updated: May 8, 2019, 7:48 PM IST
  • Share this:
மகளிர் டி-20 சேலஞ்ச் தொடரில் இன்று நடந்த போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி வெற்றி பெற்றது.

ஆடவருக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல், மகளிருக்கும் நடத்துவதற்கு முன்னோட்டமாக மகளிர் டி-20 சேலஞ்ச் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 3 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஜெய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும், ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரெய்ல்ப்ளேசர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டிரெய்ல்ப்ளேசர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, 20 வயதேயான ஹெர்லீன் டியோல் 43 ரன்கள் எடுத்தார்.




அடுத்துக் களமிறங்கிய வெலாசிட்டி அணி, 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக, இங்கிலாந்தின் டேனியல் வயட் 46 ரன்களும், இந்தியாவின் ஷஃபாலி வெர்மா 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வெலாசிட்டி அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



நாளை நடைபெற உள்ள 3-வது போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 3 போட்டிகளின் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கும் இந்திய நிறுவனம்!

VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!

தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்