முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ப்ரீமியர் லீக்..! கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு..!

மகளிர் ப்ரீமியர் லீக்..! கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவுள்ள மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) -ன் முதல் சீசனுக்கான   ஆளுமைகள் அடங்கிய நிபுணர் குழுவை அறிவித்திருக்கிறது வயாகாம்18.

  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்ச் 4ம் தேதி தொடங்கும் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) -ன் தொடக்க சீசனுக்கான தனது தொலைக்காட்சி வலையமைப்பின் விமர்சகர்கள் அடங்கிய நிபுணர்குழுவை வயாகாம்18 நிறுவனம் அறிவித்திருக்கிறது. அஞ்சும் சோப்ரா, பூனம் ரவுத், ரீமா மல்ஹோத்ரா, வேதா கிருஷ்ணமூர்த்தி, நட்டாலி ஜெர்மானோஸ், கேட் கிராஸ், மெல் ஜோன்ஸ், ஜாகீர் கான், ஆகாஷ் சோப்ரா, வெங்கடேஷ் பிரசாத், பார்த்திவ் பட்டேல், சபா கரீம், பிரக்யான் ஓஜா, மற்றும் அபினவ் முகுந்த் ஆகிய பிரபல கிரிக்கெட் ஆளுமைகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்த மாபெரும் போட்டியை 4K ரெசல்யூஷனில் வழங்க ஒருங்கிணைந்துள்ளனர்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவுள்ள மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) -ன் முதல் சீசனுக்கான   ஆளுமைகள் அடங்கிய நிபுணர் குழுவை அறிவித்திருக்கிறது வயாகாம்18.

அஞ்சும் சோப்ரா, பூனம் ரவுத், ரீமா மல்ஹோத்ரா, வேதா கிருஷ்ணமூர்த்தி, நட்டாலி ஜெர்மானோஸ், மெல் ஜோன்ஸ், கேட் கிராஸ், ஜாகீர் கான், ஆகாஷ் சோப்ரா, வெங்கடேஷ் பிரசாத், சபா கரீம், அபினவ் முகுந்த் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் இப்போட்டியின்  விரிவான நிபுணர்கள் குழுவில் இடம்பெறுகின்றனர்.

கலர்ஸ் தமிழ்.  கலர்ஸ் கன்னடா சினிமா, ஸ்போர்ட்ஸ்18 – 1 SD & HD, ஸ்போர்ட்ஸ் 18 கேல், ena, indha மகளிர் ப்ரீமியம் லீக் கிரிக்கெட் போட்டித்தொடரை வயாகாம்18     ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில்  வழங்குகிறது. அத்துடன் ஜியோசினிமாவிலும் இலவசமாக இது ஒளிபரப்பப்படுகிறது

மார்ச் 4ம் தேதி முதல் ஆரம்பமாகும் WPL-ன் முதல் சீசனின் தொடக்க போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிகளை ஜியோசினிமாவில் தமிழ் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், கட்டணமின்றி இலவசமாக பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.தமிழில் கலர்ஸ் தமிழ் சேனலிலும், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்போர்ட்ஸ்18 – 1 SD & HD சேனலிலும், ஹந்தியில் ஸ்போர்ட்ஸ்18  கேல் சேனலிலும், மற்றும் கன்னடத்தில் கலர்ஸ் கன்னடா சினிமா சேனலிலும் பார்வையாளர்கள் விறுவிறுப்பான இந்த கிரிக்கெட் போட்டித் தொடரை நேரலையாக கண்டு இரசிக்கலாம்.

“ஜியோசினிமாவிலும் மற்றும் எமது வலையமைப்பின் பல்வேறு சேனல்களிலும் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL)-ன் முதல் சீசன் போட்டிகளை வழங்குவதில் நாங்கள் அளவில்லா உற்சாகம் கொண்டிருக்கிறோம். இந்த லீக் போட்டித் தொடரின் தாக்கத்தையும், சென்றடையும் செயற்பரப்பையும் உயர்த்துவதற்காக பல்வேறு மொழிகளில் அனைவரும் பார்த்து மகிழக்கூடிய விதத்தில் நிகரற்ற அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதை இலக்காகக் கொண்டே எமது முயற்சிகள் இருக்கின்றன,” என்று வயாகாம்18 ஸ்போர்ட்ஸ்-ன் உள்ளடக்க நிகழ்ச்சி பிரிவின் தலைவர் சித்தார்த் ஷர்மா கூறினார். “ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 4K ரெசல்யூஷனில் ஒளிபரப்பு உட்பட எமது விரிந்துபரந்த கவரேஜ்-ன் வழியாக இந்த லீக் போட்டித் தொடரின் விறுவிறுப்பையும், உற்சாகத்தையும் நாடெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான விளையாட்டு இரசிகர்களுக்கு அவர்களது சொந்த தாய்மொழியிலேயே ஜியோசினிமா மீது இலவசமாக வழங்குவது எமது நோக்கமாகும். உயர்தர கிரிக்கெட்-ன் விறுவிறுப்பு குறையாத சிறப்பான சீசனாக இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். திறமையான கிரிக்கெட் வீராங்கனைகள் களத்தில் அவர்களது திறன்களை வெளிப்படுத்தி இரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருப்பதை கொண்டாடுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இப்போட்டித் தொடரில் விளையாடும் கிரிக்கெட் வீராங்கனைகளின் குடும்பங்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் கருத்துகளுடன்கூடிய பின்புல வரலாற்றையும் இரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக இந்த வலையமைப்பு வழங்கவிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் பயிற்சி அமர்வுகளின் மீதான கண்ணோட்டமும் ஒளிபரப்பப்படுவதால் இரசிகர்களுக்கு மேலும் சுவையான விருந்து காத்திருக்கிறது. அத்துடன், நிபுணர்களின் விமர்சனங்களும், அலசல்களும் WPL-ன் இந்த தொடக்க சீசன் ஆரம்பமாவதற்கு முன்பே இப்போட்டித் தொடர் மீதான உற்சாகத்தை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சீசன் முழுவதிலும், போட்டி நிகழ்வுகள் குறித்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களோடு வீராங்கனைகளின் நேர்காணல்களையும் வயாகாம்18 தனது ஸ்டுடியோவிலிருந்து ஒளிபரப்பும். திறமையான தொகுப்பாளினிகளான சஞ்சனா கணேசன் மற்றும் ரிதிமா பதக் ஆகியோர் சுஹாய்ல் சந்தோக் மற்றும் அனந்த் தியாகி ஆகியோருடன் இணைந்து இந்த தினசரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இதற்கும் கூடுதலாக இந்த சீசன் நடைபெறும் காலம் முழுவதிலும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் WPL-ல் அவ்வாரத்தில் நடைபெற்ற போட்டிகளது முக்கிய நிகழ்வுகளின் வாராந்திர தொகுப்பையும் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

WPL-ன் முதல் சீசன் ஒளிபரப்பின் ஸ்பான்சர்களாக டாடா மோட்டார்ஸ், டாடா கேப்பிட்டல், ஹீரோ விடா, பேங்க் ஆஃப் பரோடா, எம்.பி.எல் ஸ்ட்ரைக்கர், வேர்ல்ட் கோல்டு கவுன்சில், எச்&எம், ஜே.எஸ்.டபிள்யூ பெயிண்ட்ஸ், நாய்ஸ் மற்றும் அபார் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பெரு நிறுவனங்களும், பிராண்டுகளும் வயாகாம்18 உடன் இணைந்திருக்கின்றன.

நாம் ஹோகா தேரா ஹர் ஜுபன் பர் என்ற பெயரில் வயாகாம்18-ன் WPL போட்டித்தொடர் விளம்பர அறிமுகத்தை தொடர்ந்து அதன் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்த விளம்பர திரைப்படத்தை இங்கு கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பார்த்து இரசிக்கலாம்.

ஜியோசினிமாவை பதிவிறக்கம் (iOS & Android) செய்வதன் வழியாக தாங்கள் விரும்பும் விளையாட்டு நினைவுகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பார்த்து மகிழலாம். சமீபத்திய நிகழ்நிலைத் தகவல்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு Facebook, Instagram, Twitter மற்றும் YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube ஆகியவற்றின் மீது ஸ்போர்ட்ஸ்18-ஐ விளையாட்டு ரசிகர்கள் பின்தொடரலாம்.

நிபுணர்கள் குழுவில் இடம்பெறுபவர்கள் :

தமிழ்: நிரஞ்சனா நாகராஜன், ஆர்த்தி சங்கரன், அபினவ் முகுந்த், அனிருதா ஸ்ரீகாந்த், வித்யுத் சிவராமகிருஷ்ணன், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், ஆர் ஸ்ரீதர்

ஆங்கிலம்: கேட் கிராஸ், நட்டாலி ஜெர்மானோஸ், மெல் ஜோன்ஸ்

இந்தி: அஞ்சும் சோப்ரா, ரீமா மல்ஹோத்ரா, சமந்தா லோபட்டோ, ஜாகீர் கான், ஆகாஷ் சோப்ரா, பார்த்திவ் பட்டேல், அனந்த் தியாகி மற்றும் சபா கரீம், பூனம் ரவுத், பிரக்யான் ஓஜா

கன்னடம்: வேதா கிருஷ்ணமூர்த்தி, கருணா ஜெயின், வெங்கடேஷ் பிரசாத், சுஜய் சாஸ்திரி, ராகவேந்திர ராஜ், சுமந்த்

தெலுங்கு: சுனிதா ஆனந்த், ஸ்ரவந்தி நாயுடு, சந்தீப் பவனகா, விஜய் கவுட், வெங்கட்பதி ராஜு, ஹனுமா விஹாரி, அக்‌ஷத் ரெட்டி மார்ச் 4ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் முதல் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) போட்டியை காண தயாராக இருங்கள்.

First published:

Tags: Cricket, Today cricket match, Women Cricket