Home /News /sports /

மகளிருக்கான ஐ.பி.எல் போட்டி எப்போது...? கங்குலி பதில்

மகளிருக்கான ஐ.பி.எல் போட்டி எப்போது...? கங்குலி பதில்

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

மகளிருக்கான ஐ.பி.எல் போட்டி எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை வலுப்படுத்த பிசிசிஐ பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் ஐ.பி.எல் தொடங்கலாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு விதமான சிக்கல்கள் தொடர்ந்து வந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

அதில் “மகளிருக்கான ஐபிஎல் தொடரை நடத்துவதில் சில சிக்கல்கள் உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றக நிறைய வீராங்கனைகள் வேண்டும். சுமார் 150 முதல் 160 வீராங்கனைகள் தேவைப்படுவார்கள். ஆனால் தற்போது நம்மிடம் 50 முதல் 60 விராங்கனைகள் தான் உள்ளனர். இதற்கு 4 வருடங்கள் வரை தேவைப்படும்.

மாநில கிரிக்கெட் வாரியம் பலமான பெண்கள் கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். அடுத்த 4 வருடத்தில் 7 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை கட்டாயம் பிசிசிஐ மேற்கொள்ளும்“ என கங்குலி தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: BCCI, Sourav Ganguly

அடுத்த செய்தி