உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் தீப்தி ஷர்மா 40 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க -
நான் மது அருந்துவேன், புகைப் பிடிப்பேன், கொஞ்சம் லெக் ஸ்பின் போடுவேன், நான் துல்லியமானவன் அல்ல- தன்னைப் பற்றி ஷேன் வார்ன்
மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் ரிச்சா கோஷ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், அடுத்து இணைந்த ஸ்னே ராணா, பூஜா வஸ்த்ராகர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்களை பார்ட்னர்ஷிப் செய்தது.
ராணா 53 ரன்களும், பூஜா 67 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 244 ரன்களை எடுத்தது. 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர்.
இதையும் படிங்க -
Shane Warne: உன்னைப் போல் ஒருவன் இனி பிறக்கப் போவதில்லை- வார்ன் பிரிவினால் மெக்ரா உணர்ச்சிகரம்
இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒருவர் பின் ஒருவராக நடையைக் கட்டினர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சித்ரா அமீன் 30 ரன்களும் டயானா பேக் 24 ரன்களும் எடுத்தனர்.
43 ஓவர் முடிடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய வீராங்கனை ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.