ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு…

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு…

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அணி உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 12 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி இடம் வகிக்கும் குரூப் 2 பிரிவில், இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இறுதிப் போட்டி பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசை பிப்ரவரி 15ஆம் தேதியும், அடுத்ததாக இங்கிலாந்து அணியை பிப்ரவரி 18ஆம்தேதியும், பின்னர் அயர்லாந்து அணியை பிப்ரவரி 20ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்த குரூப்பில் வலுவான ஆஸ்திரேலியா இல்லாததால் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் சமீபதில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது.

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் அதற்கு முன்பாக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கு அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவார். அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பட்டியல் - ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, ), அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், சப்பினேனி மேகனா, சினே ராணா, ஷிகா பாண்டே.

இந்திய அணியில் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடைசியாக அவர் 2021-ல் இடம் பெற்றிருந்தார். இந்திய அணிக்காக அவர் 55 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா… 2ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழப்பதற்கு பந்துவீச்சில் பலவீனமாக இருந்ததே காரணம். இதையடுத்து, பவுலிங் டிபார்ட்மென்ட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்குகிறது? எதில் பார்க்கலாம்? அறிய வேண்டிய தகவல்கள்…

தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெக்வாட் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக இருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

First published:

Tags: Cricket, Indian women cricket