மகளிர் கிரிக்கெட்: போட்டியின் போது மயங்கி விழுந்த மே.இ.தீவுகளின் 2 வீராங்கனைகள்- வீடியோ

ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் மே.இ.தீவுகள் வீராங்கனை சினெல் ஹென்றி.

ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது  மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:

  முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை தேறி வருவதாக செய்திகள் தெரிவித்தாலும், இருவரும் ஏன் மயங்கி விழுந்தனர் என்பது பற்றி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  ஆனால் ஆட்டம் என்னவோ நிறுத்தப் படாமல் தொடர்ந்தது. மே.இ.தீவுகள் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வென்றது.  முதலில் பேட் செய்த விண்டீஸ் மகளிர் அணி 125/6 என்ற ஸ்கோரை எட்டியது. இலக்கை விரட்டியதில் பாகிஸ்தான் 18 ஓவர்களில் 103/6 என்று முடிந்தது, அவுட் ஆன 6 வீராங்கனைகளில் 5 பேர் ரன் அவுட்.
  இந்த வெற்றி மூலம் மே.இ.தீவுகள் தொடரை கைப்பற்றியது. இன்னொரு போட்டி ஜூலை 4ம் தேதி நடைபெறுகிறது.

  இந்நிலையில் இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
  Published by:Muthukumar
  First published: