முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் தொடர்: தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவிய பெங்களூரு அணி

மகளிர் ஐபிஎல் தொடர்: தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவிய பெங்களூரு அணி

அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி

அதிரடியாக விளையாடிய அலிசா ஹீலி

Royal Challengers Bangalore Women vs UP Warriorz | அதிரடியாக விளையாடிய உபி வாரியர்ஸ் அணி கேப்டன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் செலஞ்சர்ஸ் அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

மகளிர் ஐபிஎல் தொடர் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற 8வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் மந்தனா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் மந்தனா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் டிவைனுடன் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். டிவை 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி அரை சதம் அடித்தார். 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க பெங்களூரு அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறி கொடுத்து இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சிறப்பாக விளையாடிய எக்லெஸ்டோன் 4 விக்கெட்டையும் தீப்தி சர்மா 3 விக்கெட்டை எடுத்தனர்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி அணி வாரியர்ஸ் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணி பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார். கேப்டன் கேப்டன் அலிசா ஹீலி 11 பவுண்டரிகளை விளாசி 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் உபி அணி 13ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்து  வெற்றி இலக்கை எட்டியது. உபி அணியில் கேப்டன்  அலிசா ஹீலி  47 பந்துகளில் 97 ரன்களும் தேவிகா 31 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.  தற்போது நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் தொடரில்  மந்தான தலைமையில் களமிறங்கிய ராயல் பெங்களூரு அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

First published: