ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் கிரிக்கெட் : முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக். வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா…

மகளிர் கிரிக்கெட் : முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக். வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலிய வீராங்கனைகள்

ஆஸ்திரேலிய வீராங்கனைகள்

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை வகிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.

அலிஷா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களத்தில் இறங்கினர். ஷெபாலி வர்மா 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் அதிரடி ஆட்டத்தை விளையாடி 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு…

ஸ்மிருதி மந்தனா 22 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். கடைசி ஓவர்களில் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், தேவிகா வைத்யா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தீப்தி, ரிச்சா ஆகியோர் தலா 36 ரன்களும், தேவிகா வைத்யா 25 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 172 என்ற சவாலான ஸ்கோரை எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி களத்தில் இறங்கியது. அதன் தொடக்க வீராங்கனைகளான பெத் மோனி மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 37 ரன்களை எடுத்து கேப்டன் அலிசா ஹீலி ஆட்டமிழந்தார்.

‘இந்தியாவை ஒயிட் வாஷ் அடிப்பதுதான் எங்கள் இலக்கு’ - வங்கதேச பயிற்சியாளர் பேட்டி

அடுத்த இணைந்த பெத் மோனி – தஹிலா மெக்ராத் இணை பொறுப்பாக விளையாடி 18.1 ஓவர் முடிவில் வெற்றி இலக்கான 173 ரன்களை எட்டியது. மோனி 57 பந்துகளில் 89 ரன்களும், தஹிலா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஆட்டம் இதே மும்பை மைதானத்தில் வரும் ஞாயிறன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

First published:

Tags: Cricket, Women Cricket