ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் ஆசியகோப்பை : ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

மகளிர் ஆசியகோப்பை : ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

இலங்கை த்ரில் வெற்றி

இலங்கை த்ரில் வெற்றி

மகளிர் ஆசியகோப்பை டி20 அரையிறுதி சுற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலங்கையிடம் தோல்வியடைந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

  இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளைாயடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.

  Also Read : நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட... தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

  இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பிஸ்மா மரூஃப் 42 ரன்களை சேர்த்தார். இந்த போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை தரப்பில் கடைசி ஓவரை அச்சினி குலசூரிய வீசினார்.

  கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அபாராமாக பந்துவீசிய அச்சினி குலசூரிய விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் மகளிர் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது.

  அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Cricket, Pakistan News in Tamil, Sri Lanka