ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் ஆசிய கோப்பை : இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசிய கோப்பை : இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

ஆசியக் கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின.

    வங்கதேசத்தின் சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ஷபாலி வர்மா 28 பந்துகளில் 42 ரன்கள் விளாசி அசத்தினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

    Also Read : நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட... தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

    இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. 149 ரன்ககள் இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய தாய்லாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பல வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் விளையாடியபோதும் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தாய்லாந்து அணி தோல்வியைத் தழுவியது. இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Published by:Vijay R
    First published: