மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், புதன்கிழமையன்று இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு, "பிரதமர் நரேந்திர
மோடியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட செய்தி கிடைத்துள்ளது" என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், கெய்ல் ட்விட்டரில் அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இந்திய மக்களுடனான தனது "நெருக்கமான தனிப்பட்ட உறவுகள்" பற்றி பேசுவதாகவும் கூறினார். "இந்தியாவின் 73வது குடியரசு தினத்திற்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி @narendramodi அவர்களுடனும் இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய தனிப்பட்ட உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் தனிப்பட்ட செய்தியைக் கேட்டு நான் விழித்தேன். யுனிவர்ஸ் பாஸ் இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இடது கை தொடக்க பேட்டரான கெய்ல், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட்டில் தாக்குதல் பாணியில் அடித்து நொறுக்குபவர் என்பதால் மற்றும் நெருக்கமான இந்தியாவில் பிரபலமானவர்.
42 வயதான அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். RCB க்காக அவர் 91 போட்டிகளில் விளையாடி 154.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 3420 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸைத் தொடர்ந்து RCB இன் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்தவர்.
"தி யுனிவர்ஸ் பாஸ்", என்று தன்னைக் குறிப்பிடும் கெய்ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் கடைசியாக விளையாடினார். இருப்பினும், ஐபிஎல்லில் கெயிலின் பெரிய சிக்ஸர்களை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, ஏனெனில் இந்த ஆண்டுக்கான ஏலப் பட்டியலில் தொடக்க வீரர் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது.
கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட், 301 ஒருநாள் மற்றும் 79 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.