கோலி இனி அபாயகரமானவராக இருப்பார்- கவுதம் கம்பீர் கணிப்பு
ரோகித் சர்மாவுடனான ஈகோ மோதலில் இருந்து வரும் விராட் கோலி இந்திய அணிக்கு அபாயகரமானவராக மாறி விடுவாரோ என்று அனைவரும் பீதியுடன் பார்த்து வரும் நிலையில் எதிரணியினருக்கு விராட் கோலி இனி ஆபத்தான பேட்டராக இருப்பார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் ஆடப்பிடிக்காமலோ என்னவோ கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு கேட்டுள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில் கவுதம் கம்பீர் கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் விராட் கோலி அபாய பேட்டராகத் திகழ்வார் என்கிறார்.
கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பீதியடைந்துள்ள நேரத்தில்
கவுதம் கம்பீர் கூறும்போது,
“கேப்டன் பொறுப்பில் கோலி இல்லாதது அவரது அழுத்தத்தை பெரும் அளவில் குறைக்கும். கேப்டன் பதவியின் சுமை அவரது தோள்களில் இல்லாததால் ஒரு நாள் போட்டிகளில் இனி அவர் எதிரணியினருக்கு மிகவும் ஆபத்தானவராக மாறக்கூடும்.
இனி வரும் காலங்களில் அவர் இந்தியாவை பெருமைப்படுத்தப் போகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனி அவர் விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் எடுக்கப் போகிறார். அதே நேரத்தில், இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் அநேகமாக தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் பார்வையைக் கொண்டு இந்திய அணியை வழிநடத்துவார்கள்.
Also Read: Pak vs WI: ஷாஹின் அஃப்ரீடி ஒரே ஓவரில் 3 விக்கெட்: மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
அதே சமயம், இவ்வளவு நீண்ட காலமாக அணியின் கேப்டனாக அவர் காட்டிய அதே ஆர்வத்தை அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் நிச்சயம் காட்டுவர்” என்கிறார் கவுதம் கம்பீர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.