ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனி இல்லாத டெஸ்ட் அணி... அவருடைய ஜெர்சி எண் யாருக்கு தெரியுமா?

தோனி இல்லாத டெஸ்ட் அணி... அவருடைய ஜெர்சி எண் யாருக்கு தெரியுமா?

தோனி

தோனி

டெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது ஐசிசி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  டெஸ்ட் போட்டிகளில் தோனி இல்லாத நிலையில் அவருடைய எண்ணை யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  டெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது ஐசிசி. முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயரோ அல்லது எண்ணோ இடம் பெறாது. முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள்.

  தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது ஜெர்சியில் அவர்களது பெயர் மற்றும் விரும்பும் எண் இடம்பெற உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

  இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற உள்ள ஆஷஸ் தொடரிலிருந்து இந்த புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இங்கிலாந்து வீரர்களின் புதிய டெஸ்ட் ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

  இந்திய அணி மேற்க்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 3-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களது பெயர் மற்றும் விரும்பும் எண் இடம்பெற உள்ள நிலையில் கோலி, விராட் ஆகிய வீரர்கள் தங்களது ஒரு நாள் ஜெர்ஸி எண்ணான 18 மற்றும் 45 ஆகிய எண்களையே பயன்படுத்து அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  டெஸ்ட் தொடர்களில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளநிலையில் அவருடைய ஜெர்சியை எண்ணை யார பயன்படுத்துப்போகிறார்கள் எனற் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக 7 என்ற எண்ணை கொண்ட ஜெர்சியை யாரும் பயன்படுத்தப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: MS Dhoni