முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிள்… 4 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் டெல்லி அணி…

மகளிர் ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிள்… 4 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் டெல்லி அணி…

டெல்லி அணி

டெல்லி அணி

தொடர் முழுவதும் வெளிப்படுத்திய பெங்களூரு அணி 0 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் மைனஸ் 2.11-யைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பாயின்ட்ஸ் டேபிளில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை சந்தித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 150 ரன்கள் குவித்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள டெல்லி 4 இல் வெற்றி பெற்று 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் 3.52 –யைப் பெற்று மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. யூ.பி. வாரியர்ஸ் 3 ஆவது இடத்திலும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 4 ஆவது இடத்திலும் உள்ளன.

மிக மோசமான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 0 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் மைனஸ் 2.11-யைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் சைகா இஷாக் 4 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். சிறந்த பந்துவீச்சை பொருத்தளவில் மேரிசன் கேப் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

First published:

Tags: WIPL