இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்கா பயணம்!

துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விராட் கோலி இந்த தொடருக்கு முன்பு செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் என தகவல் வெளியானது.

Web Desk | news18
Updated: July 29, 2019, 10:58 AM IST
இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்கா பயணம்!
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
Web Desk | news18
Updated: July 29, 2019, 10:58 AM IST
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் தொடரில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் விளையாட இருக்கும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியல், கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தொடரில் இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.

இதையும் படிங்க... அனுமதியின்றி மனைவியை தங்க வைத்த வீரர் இவரே... கோலி - ரோஹித் பிரச்னைக்கும் காரணமும் அதுவே...!


இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்றிரவு அமெரிக்கா செல்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக அங்கு வருகிற 3-ம் தேதி முதல் நடக்கும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.

விராட் கோலி


இதற்கிடையே, துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விராட் கோலி இந்த தொடருக்கு முன்பு செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் என தகவல் வெளியானது.

Loading...

ஆனால், திட்டமிடப்படி தொடருக்கு முன்பே விராட் கோலி செய்தியாளர்களை சந்திப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...