நியூசி. அறிமுக வீரரைப் பார்த்து அலறிய பாகிஸ்தான்!

#WilliamSomerville takes four on debut | நியூசிலாந்தின் அறிமுக வீரர் வில்லியம் சமெர்வில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். #PAKvNZ

news18
Updated: December 5, 2018, 10:57 PM IST
நியூசி. அறிமுக வீரரைப் பார்த்து அலறிய பாகிஸ்தான்!
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை சகவீரர்களுடன் கொண்டாடும் வில்லியம் சமெர்வில் (ICC)
news18
Updated: December 5, 2018, 10:57 PM IST
நியூலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அறிமுக வீரரின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னில் ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் வரலாறு படைத்தது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Loading...
நிதானமாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்து வெளியேறினார். விக்கெட் கீப்பர் வாட்லிங் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்கவீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், அஸார் அலி மற்றும் ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால், அந்த அணி வலுவான நிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு அறிமுக வீரரால் ஆபத்து வந்தது.சுழற்பந்தால் திணறடித்த வில்லியம் சமெர்வில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால், 348 ரன்களுக்கே பாகிஸ்தான் ஆல் அவுட்டானது.

Also Watch...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...