இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர்?

ICC World Cup 2019 | India vs West Indies | Vijay Shankar | விஜய் சங்கர் பெரிய அளவில் திறனை வெளிப்படுத்த தவறியதால் மேற்கிந்திய தீவுகள்அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

Vijay R | news18
Updated: June 27, 2019, 10:53 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர்?
விஜய் சங்கர்
Vijay R | news18
Updated: June 27, 2019, 10:53 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இடம்பெறுவது கேள்விகுறியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பெற்றிருந்த போதும் முதல் 2 போட்டிகளில் அவர் அணியில் இடம்பெறாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஷிகார் தவான் காயமடைந்ததால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் ஜொலிக்காத விஜய் சங்கர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாக அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது 4வது வீரராக விஜய் சங்கர் களமிறங்கினார்.


உலகக் கோப்பை தொடரில் அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்து கோட்டைவிட்டார். அந்தப் போட்டியில் அவருக்கு பந்துவீசவும் வாய்ப்பு வழங்கவில்லை. ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்காமல் விஜய் சங்கருக்கு ஏன் மீண்டும் வாய்ப்பளித்தார்கள் என ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

விஜய் சங்கர் பெரிய அளவில் திறனை வெளிப்படுத்த தவறியதால் மேற்கிந்திய தீவுகள்அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை என கேப்டன் கோலி அறிவிக்க அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. விஜய் சங்கருக்கு இது மிகப்பெரிய லக் என்றே சொல்லும்படி இருந்தது. இந்திய அணியில் இதுப்போன்ற ஒரு வாய்ப்பு எந்த ஒரு வீரருக்கும் அமையாது. ரிஷப் பந்த், தினேஷ் கார்த்தி கிடைக்காத வாய்ப்பு அவருக்கு வழங்ப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விஜய் சங்கர் 4வது வீரராகவே களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய் சங்கர் 14 ரன்களில் ரோச் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Loading...

விஜய் சங்கரின் மோசமான ஆட்டத்தால் கடுப்பான ரசிகர்கள் அவரை இணையத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அடுத்த போட்டியில் விஜய் சங்கரை அணியில் எடுப்பதற்கு பதிலாக 10 வீரர்களுடன் மட்டும் இந்திய அணி விளையாடலாம் என அவர் மீதான விமர்சனங்களை அள்ளி தெறிக்கவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் அணியில் இடம் பெறுவது கேள்விகுறியாகி உள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பெரிய அளவில் விஜய் சஙக்ர் ஜொலிக்கவில்லை. தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடும் வீரர் தேவை என்பதால் ரிஷ்ப பந்துக்கே அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Also Watch

First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...